கர்நாடகாவில் 28ம் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு

புத்தாண்டையொட்டி இரவு நேர கொண்டாட்டங்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது என்று கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு முடிவு
கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு முடிவு
Published on

கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் பரவல் அச்சம் காரணமாக பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளன. இந்நிலையில் டிசம்பர் 28ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. 

வரும் 28ம் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை 144 விதியின் கீழ் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

144 தடை உத்தரவு போடப்படுவதால் புத்தாண்டு கொண்டாட்ட விருந்து நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஹோட்டல்கள், உணவகங்களில் 50 சதவீத இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் சுதாகர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com