கிறிஸ்துமஸ் தாத்தா அதிக விலைக்கு பெட்ரோல் போட வேண்டியதில்லை - காங்கிரஸ் கிண்டல்

இந்தியாவில் அதிகரித்து வரும் பண வீக்கம், எரிபொருட்கள் விலை உயர்வை விமர்சிப்பது போல காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ்
காங்கிரஸ்
Published on

புது டெல்லி:

இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிப்பது போல காங்கிரஸ் கட்சி, மத்திய அரசை கிண்டல் செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்து ஒன்றில், ‘ நல்ல வேளை கிறிஸ்துமஸ் தாத்தா சறுக்கு வண்டியில் பயணம் செய்கிறார். அவர் அதிக விலை கொடுத்து எரிபொருட்கள் வாங்க வேண்டியது இல்லை’ என குறிப்பிட்டுள்ளது.

மற்றொரு பதிவில், ‘கிறிஸ்துமஸுக்கு பொருட்கள் வாங்குவதில் எவ்வளவு மகிழ்ச்சி. விலை வாசி உயர்வில் உங்கள் சேமிப்பு எல்லாம் கரையாமல் பொருட்கள் வாங்கியிருந்தால் மகிழ்ச்சி.’ 

இவ்வாறு தொடர்ச்சியாக பல ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டு மத்திய அரசை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com