அரியானாவில் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அமலானது

அரியானாவில் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அமல்.தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம் என முதல் மந்திரி தெரிவித்தார்.
அரியானாவில் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அமலானது
Published on

சண்டிகர்:

அரியானாவில் கடந்த 5-ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது.

மொத்தமுள்ள 90 தொகுதிகளில் அந்தக் கட்சி முதல் முறையாக 48 இடங்களைக் கைப்பற்றியது. இதையடுத்து, 2வது முறையாக அரியானா மாநில முதல் மந்திரியாக நயாப் சிங் சைனி பதவியேற்றார்.

இந்நிலையில், பா.ஜ.க.வின் முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அரியானா அரசு அறிவித்தது.

இதுதொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த மாநில முதல் மந்திரி நயாப் சிங் சைனி கூறியதாவது:

முதல் மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் நான் கையெழுத்திட்ட முதல் கையெழுத்து சிறுநீரக நோயாளிகள் தொடர்பானது.

அரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.

தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம். டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது அரியானா அரசு அந்த செலவை ஏற்கும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com