

மே 3 நடைபெற்ற இளநிலை மருத்துப்படிப்புகளுக்குக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு கண்டறியப்பட்டதை அடுத்து ரத்து செய்யப்பட்டது. மறுதேர்வு வரும் ஜுன் 21 அன்று நடைபெற உள்ளது.
மேலும் முந்தைய தேர்வுக்கு செலுத்திய கட்டணமும் மாணவர்களுக்கு திருப்பி வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. மேலும் மறுதேர்வுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ஜூன் 21 நடைபெறும் மறுதேர்வுக்கான City Intimation Slip வெளியாகி உள்ளது.
தேர்வு மையத் தகவல்கள் தற்போது neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன.
neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். முகப்புப் பக்கத்தில் உள்ள 'Advance City Intimation Link'-ஐக் கிளிக் செய்யவும். உங்களது Login விவரங்களை உள்ளிடவும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நகரத்தை சரிபார்த்து, அந்தப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
நீட் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜூன் 14ஆம் தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.