பிறந்த குழந்தையை விற்க முயற்சி- டாக்டர் உட்பட 3 பேர் கைது

சோபா ராணி அணுகிய இளம் பெண் தன்னுடைய குழந்தையை விற்க உள்ளதாக தெரிவித்தார்.டாக்டர், குழந்தையின் தாய் மற்றும் இடைத்தரகர் உட்பட 3 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
பிறந்த குழந்தையை விற்க முயற்சி-  டாக்டர் உட்பட 3 பேர் கைது
Published on

தெலுங்கானா மாநிலம், மேட்சல் மாவட்டம், கொடூரை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 60 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தையை வளர்க்க போதிய வருமானம் இல்லாததால், குழந்தையை விற்க முடிவு செய்தார்.

அதன்படி பீர்ஜாதி குடா மாநகராட்சி உட்பட்ட ராமகிருஷ்ண நகரில் சோபா ராணி என்ற ஓமியோபதி டாக்டர் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். சோபா ராணி அணுகிய இளம் பெண் தன்னுடைய குழந்தையை விற்க உள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து இளம் பெண்ணிடம் டாக்டர் சோபா ராணி ரூ.10 ஆயிரத்தை முன்பணமாக கொடுத்தார்.

நேற்று காலை இளம் பெண் தன்னுடைய பெண் குழந்தையை சோபா ராணி இடம் ஒப்படைத்தார்.

தகவல் அறிந்த தன்னார்வளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டாக்டர் சோபா ராணி குழந்தையின் தாய் மற்றும் இடைத்தரகர் உட்பட 3 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com