விவசாயிகளுக்கு பொட்டாஷ் உரம் தட்டுபாடின்றி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை

கனடா நிறுவனத்துடன், இந்திய உர நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்.இந்திய நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 15 லட்சம் மெட்ரிக் டன் பொட்டாஷ் உரம் விநியோகம்.
விவசாயி, பொட்டாஷ் உரம்
விவசாயி, பொட்டாஷ் உரம்
Published on

உலக அளவில் பொட்டாஷ் உர விநியோகத்தில் கனடாவின் கான்போடெக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமான திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனம் ஆண்டுக்கு 130 லட்சம் மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி செய்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்நிலையில் இந்திய வேளாண் சமூகத்துக்கு நீண்ட காலத்திற்கு உரம் கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையாக மத்திய அரசு எடுத்துள்ளது. இதன்படி இந்திய உர நிறுவனங்களான கோரமண்டல் இன்டர்நேஷனல், சம்பல் உரங்கள் மற்றும் இந்திய பொட்டாஷ் நிறுவனங்கள் கனடாவின் கான்போடெக்ஸ் நிறுவனத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம், மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவிடம் இன்று வழங்கப்பட்டது. 

இதுகுறித்து தெரிவித்துள்ள மன்சுக் மாண்டவியா, நாடு முழுவதும் உர விநியோகம் மற்றும் விலையில் உள்ள நிலையற்ற தன்மையை இந்த ஒப்பந்தம் குறைக்கும் என்றார். தடையின்றி நீண்ட காலத்திற்கு பொட்டாஷ் உரம் இந்தியாவிற்கு கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய உர நிறுவனங்களுக்கு 3 ஆண்டு காலத்திற்கு ஆண்டுக்கு 15 லட்சம் மெட்ரிக் டன் பொட்டாஷ் உரத்தை, கனடாவின் கான்போடெக்ஸ் நிறுவனம் விநியோகம் செய்யும் என்றும் அவர் கூறினார். இந்த ஒப்பந்தம் மூலம், விவசாயிகளின் நலனும், நாட்டின் உணவு பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று மந்திரி மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com