ஜார்கண்ட் பள்ளியில் இருந்து நீட் வினாத்தாள் திருடப்பட்டது- சிபிஐ தகவல்

அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி டிரங்கைத் திறந்து வினாத்தாளை திருடினர். திருடப்பட்ட வினாத்தாள், அதே நாளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பணம் செலுத்திய குறிப்பிட்ட சில மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
ஜார்கண்ட் பள்ளியில் இருந்து நீட் வினாத்தாள் திருடப்பட்டது- சிபிஐ தகவல்
Published on

புதுடெல்லி:

நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபக்கில் உள்ள ஒயாசிஸ் பள்ளியின் முதல்வர், துணை முதல்வர் மற்றும் மையக் கண்காணிப்பாளர் ஆகியோரின் உடந்தையுடன் நீட் தேர்வு வினாத்தாள் திருடப்பட்டது. அவர்கள், அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி டிரங்கைத் திறந்து வினாத்தாளை திருடினர்.

திருடப்பட்ட வினாத்தாள், அதே நாளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பணம் செலுத்திய குறிப்பிட்ட சில மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com