‘பிரதானை நீக்கி பிரதான் மந்திரியை காப்பாற்றியுள்ளீர்கள்’ - நாடாளுமன்றத்தில் அகிலேஷ் யாதவ் கிண்டல் பேச்சு!

இளைஞர்கள் எழுப்பிய கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.
‘பிரதானை நீக்கியதன் மூலம் பிரதான மந்திரியை காப்பாற்றியுள்ளீர்கள்’ - நாடாளுமன்றத்தில் அகிலேஷ் யாதவ் கிண்டல் பேச்சு!
Published on

நாடாளுமன்ற மக்களவையில் இன்று வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதாமீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ்,

“முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்திற்கு வந்தபோது அவருக்கு வெளியே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் எங்களுக்கு எந்தப் புகாரும் இல்லை. ஆனால், இதன் மூலம் ஆளும்கட்சி உறுப்பினர்கள் எவ்வளவு பெரிய நெருக்கடியிலிருந்து தப்பித்தோம் என்று நிம்மதி அடைந்திருப்பதை கற்பனை செய்து பாருங்கள்.

பிரதானை பதவியிலிருந்து நீக்கியதன் மூலம், நீங்கள் உங்களுடைய 'பிரதான் மந்திரி'யை சாமர்த்தியமாகக் காப்பாற்றிவிட்டீர்கள்.

அரசைப் பணிய வைத்த இளைஞர்களின் மன உறுதிக்கும், ஒற்றுமைக்கும் நான் தலைவணங்குகிறேன். அரசு தன்னை வெல்ல முடியாதது என்று நினைத்தது. ஆனால், பணிய வைக்க ஆள் இருந்தால் அரசாங்கமும் பணியும் என்பதை புதிய தலைமுறை இளைஞர்கள் தங்களின் போராட்டத்தின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கல்வி, தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழகங்களை ஒரே நிறத்தில் வர்ணம் பூசி அழிக்க முயன்று வருகிறது. இது மாணவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே, உலகின் மிகப்பெரிய கட்சியான பாஜக பின்வாங்க வேண்டிய அளவுக்குப் போராட்டங்கள் மாபெரும் அளவில் வெடித்தன. இந்த அணுகுமுறை மாற வேண்டும்.

இளைஞர்கள் எழுப்பிய கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறேன். கேலிக்கூத்தாகத் தொடங்கும் ஒரு கட்சி கூட ஒரு பெரிய சக்தியாக மாற முடியும் என்பதை அரசாங்கம் உணர்ந்திருக்க வேண்டும்.

சட்டம் இயற்றுவது மட்டும் முக்கியமல்ல; அரசின் நோக்கம் நேர்மையாக இருக்க வேண்டும். உங்கள் நோக்கம் நேர்மையாகும் போது மட்டுமே தேர்வு முறைகள் சுத்தமாகும்.” என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com