திருப்பதி கோவில் அருகே படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி

போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.இந்த சம்பவம் திருப்பதி கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி கோவில் அருகே படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சின்ன சோவ் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் நேற்று தங்களது 2 மகன்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்தனர். கோவில் அருகே உள்ள பத்மநாப நிலைய கட்டிடத்தில் அவர்கள் தரிசனத்திற்கு செல்வதற்காக காத்திருந்தனர்.

அப்போது அவருடைய மகன்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். படிக்கட்டில் கிரில் இடைவெளி வழியாக அவர்களது 3 வயது மகன் தவறி கீழே விழுந்தான். அதில் பலத்த காயமடைந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

இந்த சம்பவம் திருப்பதி கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com