கேரளாவில் குண்டு வெடிப்பு: காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கண்டனம்

கொன்று அழிக்கும் மனநிலைக்கு இரையாகும் என் மாநிலத்தை பார்ப்பது சோகமானது.காட்டுமிராண்டித்தனத்தை கண்டிப்பதில் அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்
கேரளாவில் குண்டு வெடிப்பு: காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கண்டனம்
Published on

கேரளாவில் கிறிஸ்தவ கூட்டரங்கில் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் கூறியதாவது:-

கேரளாவில் மதக் கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியால் அதிர்ச்சி அடைந்தேன். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். விரைவாக போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கொன்று அழிக்கும் மனநிலைக்கு இரையாகும் என் மாநிலத்தை பார்ப்பது சோகமானது. இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தை கண்டிப்பதில் அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றுபட வேண்டும் என்றும் வன்முறையால் வன்முறையை தவிர வேறு எதையும் சாதிக்க முடியாது என்று அவர்களை பின்பற்றுபவர்களுக்கு போதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com