ராஜ்நாத் சிங் வீட்டில் அமித் ஷா, நிதின் நபின், பாஜக முக்கிய தலைவர்கள் ஆலோசனை

பாஜக-வின் மத்திய குழு மாற்றி அமைக்கப்படலாம் என்ற செய்தி வெளியான நிலையில், இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.
ராஜ்நாத் சிங், அமித் ஷா
ராஜ்நாத் சிங், அமித் ஷாராஜ்நாத் சிங், அமித் ஷா
Published on

மத்திய அமைச்சரவை மாற்றப்படலாம் என்ற யூகச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வீட்டில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் நிதின் நபின், உள்ளிட்ட தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.

பாஜக கட்சியிடம் இருந்து இந்த சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவிலலை. இருந்த போதிலும் கட்சி அலுவலகத்தைச் சேர்ந்த மத்திய குழுவை மாற்றி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

நிதின் நபின் தலைமையிலான புதிய மத்திய குழு ஜனவரி மாதம் பொறுப்பேற்றது. சீனியர மற்றும் ஜூனியர் நிறைந்த குழு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய ஆட்சி பொறுப்பில் இருக்கும் முக்கிய தலைவர்கள் கட்சி பணிக்காக பணியமர்த்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா டெல்லி மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அர்சச்னா குப்தா ஹரியானா மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். சர்தார் கேவால் சிங் திலோன் பஞ்சாப் மாநில தலைவராக நியமிக்கப்பட்ார். திரிபுராவில் இருந்து முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ அபிஷேக் டெப்ராய், அம்மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com