மணிப்பூர் முதல்வராக பிரேன் சிங் பதவி ஏற்றார்

பிரேன் சிங்கிற்கு ஆளுநர் இல.கணேசன் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
முதல்வராக பதவியேற்ற பிரேன் சிங்
முதல்வராக பதவியேற்ற பிரேன் சிங்
Published on

இம்பால்:

மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூரில் 32 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக தலைநகர் இம்பாலில் நேற்று சட்டமன்ற கட்சி கூட்டம் நடைபெற்றது. மேலிட பார்வையாளர்களான நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு, தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரேன் சிங் மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். 

சட்டமன்ற கட்சி தலைவராக பிரேன் சிங் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, ஆளுநர் இல.கணேசனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரப்பட்டது. ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது. 

முதல்வராக பிரேன் சிங் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் இல.கணேசன் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com