பா.ஜனதா தோல்வி குறித்து சுயபரிசோதனை செய்வோம்: பசவராஜ் பொம்மை பேட்டி

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தோல்விக்கான காரணங்களை ஆராய்வோம்.
பா.ஜனதா தோல்வி குறித்து சுயபரிசோதனை செய்வோம்: பசவராஜ் பொம்மை பேட்டி
Published on

பெங்களூரு :

கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா அடைந்த தோல்வி குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஹாவேரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். பிரதமர் மோடி உள்பட கட்சியின் அனைத்து தலைவா்களும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது. பா.ஜனதா தோல்வி குறித்து நாங்கள் சுயபரிசோதனை செய்வோம். தோல்விக்கான காரணங்களை ஆராய்வோம்.

ஒரு தேசிய கட்சியாக நாங்கள் தவறுகளை சரிசெய்து கொண்டு, அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவோம். எங்கள் கட்சியை மீண்டும் வலுப்படுத்தி முழு பலத்துடன் திரும்புவோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com