நீட் முறைகேடு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற அசாம் அமைச்சர் மகள்.. முதல்வர் ஹிமாந்தா ரியாக்ஷன் இதுதான்

நாளை என் மகன் வக்கீல் ஆனால், எனக்கு பிடிக்காத ஒருவருக்கு கூட ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகலாம்
 திபிஷா, ஹிமாந்தா
திபிஷா, ஹிமாந்தா
Published on

நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஐந்தரில் மந்தரில் ஒரு மாதத்திற்கும் சிஜேபி நடத்தி வந்த போராட்டம், நேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததன் மூலம் வெற்றி பெற்றது.

டெல்லியில் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதிலும் மாண்வர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அசாம்

அந்த வகையில் அசாம் தலைநகர் கௌஹாத்தியிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இதில் அசாம் பாஜக அரசில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக உள்ள கேஷப் மஹான்தா உடைய மகள் திபிஷா இந்த போராட்டத்தில் பங்கேற்றார்.

சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ ஒன்றில், போராட்டக்களத்தில் திபீஷா, பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வலியுறுத்தியது இடம்பெற்றிருந்தது.

அமைச்சரின் மகள் பாஜக அரசுக்கு எதிராக போராடியது அக்கட்சி ஆதரவாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் திபிஷாவையும், அமைச்சர் கேஷப் மஹான்தாவைக்கும் சமூக வலைத்தளங்களில் அக்கட்சி ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர்.

அசாம் முதல்வர்

இந்த விவகாரம் குறித்து அறிந்த அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, கேஷப் மஹான்தாவை விமர்சிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "அவரின் மகள் போராட்டத்தில் பங்கெடுத்தார் என்பதற்காக கேஷப் மஹந்தாவை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை.

அவரின் மகள் தந்தையின் அரசியல் சிந்தாந்தத்தை பின்பற்ற வேண்டும் என்று இல்லை. வயதுவந்த பிள்ளைகள், பெற்றோர் கொண்டிருக்கும் கருத்தில் இருந்து மாறுபட்ட அரசியல் கருத்தை கொண்டிருக்கலாம்.

வயதுவந்த பிள்ளைகள் தேர்ந்தெடுக்கும் அரசியலுக்காக அவர்களின் பெற்றோரை சாடுவது சரியில்லை.

நாளை என் மகன் வக்கீல் ஆனால், எனக்கு பிடிக்காத ஒருவருக்கு கூட ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகலாம்" என தெரிவித்தார்.

அதேநேரம், போராட்டத்தில் திபிஷா எழுப்பிய முழக்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஹிமாந்தா, " அப்பெண் எழுப்பிய முழக்கங்களுடன் நான் உடன்படவில்லை. அடுத்த முறை நான் அவரை சந்திக்கும்போது, அவர் சொன்னது சரியில்லை என்பதை அவருக்கு நான் பேசி புரிய வைக்க முயல்வேன்" என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com