தாஜ்மகால் முன்பு யோகா செய்த 5 பெண்கள் மன்னிப்பு கேட்டனர்

தாஜ்மகால் முன்பு பெண்கள் 5 பேர் யோகாசனம் செய்தனர். பெண்கள், தாஜ்மகாலில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்தனர்.
தாஜ்மகால் முன்பு யோகா செய்த 5 பெண்கள் மன்னிப்பு கேட்டனர்
Published on

புதுடெல்லி:

தாஜ்மகால் முன்பு பெண்கள் 5 பேர் யோகாசனம் செய்தனர். அங்குள்ள சிவப்பு மணற்கல் மேடையில் நான்கு பெண்கள் சூரிய நமஸ்காரம் செய்ய அதை ஒருவர் வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இதையடுத்து அந்த பெண்களிடம், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது பெண்கள், தாஜ்மகாலில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்தனர். இதனால் அவர்களை எச்சரித்து, எழுத்துப்பூர்வ மன்னிப்பு கடிதத்தை அதிகாரிகள் பெற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com