டெல்லி போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயற்சி! மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க அண்ணாமலை அறிவிப்பு

ஒரு நாட்டின் உண்மையான வலிமை இளைஞர்கள்கள் தான் என்றார் அண்ணாமலை
Annamalai
Published on

நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டத்தை சில சக்திகள் தங்களுக்கு சாதகமாக திசைதிருப்ப முயற்சிப்பதாக வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனரான அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் தீவிரமடையும் போராட்டம்

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவ அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற முற்றுகை பேரணியின் போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு நடந்ததால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் பாதுகாப்பு காரணமாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதுகுறித்து அண்ணாமலையின் கேள்வி..

ஹைஜாக் எச்சரிக்கை:

போராடும் மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீட் விசாரணைக்கு தொடர்பில்லாதவர்கள் தற்போது போராட்ட மேடையில் உள்ளனர்.

பேச்சுவார்த்தை தாமதம் ஏன்:

பாஜக தலைமையிலான மத்திய அரசு மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏன் இவ்வளவு தாமதம்? போராட்டம் வன்முறையாக மாறும் வரை காத்திருந்தது யார்?

பொறுப்பேற்காதது ஏன்?

கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை நீட் வினாத்தாள் கசிந்துள்ளது. இதற்கு இதுவரை மத்திய அரசு பொறுப்பேற்காதது ஏன்?

அண்ணாமலையின் கோரிக்கை

மத்திய அரசு மாணவர்களுடன் உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் அவர்களின் கவலைகளுக்கு விரைவான தீர்வு காண வேண்டும்.

"ஒரு நாட்டின் உண்மையான வலிமை இளைஞர்கள். மாணவர்கள் கல்வி அமைப்பின் நேர்மையில் நம்பிக்கை இழந்தால் அது நாட்டின் எதிர்காலத்தை ஆபத்தில் தள்ளும்" என எச்சரித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com