நெருப்பில் தோன்றிய ஆஞ்சநேயர் உருவம்- டி.வி. நடிகை நெகிழ்ச்சி பதிவு

யாக குண்டத்தில் இருந்த தீயில் அனுமன் உருவம் தோன்றியது.நடிகை அவருடைய வீட்டிற்கு சஞ்சீவினி இல்லம் என பெயரிட்டுள்ளார்.
நெருப்பில் தோன்றிய ஆஞ்சநேயர் உருவம்- டி.வி. நடிகை நெகிழ்ச்சி பதிவு
Published on

திருப்பதி:

தெலுங்கு டி.வி. நடிகை அனசுயா பரத்வாஜ். சமீபத்தில் ஒரு புதிய வீட்டிற்குக் குடிபெயர்ந்தார். அப்போது வீட்டில் கணபதி ஹோமம் பூஜை நடத்தினர்.

யாக குண்டத்தில் இருந்த தீயில் அனுமன் உருவம் தோன்றியது. இதனை செல்போனில் படம் பிடித்த நடிகை அந்தப் படத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் ஜெய் ஹனுமான் என்று நினைக்காமல் நான் எதையும் செய்வதில்லை. நான் அனுமனை என் தந்தையாகக் கருதுகிறேன் என்பது என் அன்புக்குரிய அனைவருக்கும் தெரியும்.

நாம் எந்த கடவுளுக்கும் சத்தமாக ஏதாவது சொல்ல விரும்பினால் அதை ஒரு ஹோமம் மூலம் சொல்கிறோம். அனுமன்ஜி எங்கள் குடும்பப் பெயரையும், எங்கள் வீட்டையும் எங்களையும் ஆசீர்வதிக்க வந்தார்.

எல்லோரும் ஆன்மீகவாதிகள் அல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு ஏற்பட்ட உணர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது என தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகை அவருடைய வீட்டிற்கு சஞ்சீவினி இல்லம் என பெயரிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com