லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் - அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி

கிணறு தோண்ட லஞ்சம் கேட்டதால் விவசாயி ஆத்திரமடைந்தார். இதனால் அவர் ரூ.2 லட்சம் பணத்தை அரசு அலுவலகம் முன் வீசி எறிந்தார்.
லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் - அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி
Published on

மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் சம்பாஜி நகரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் கிணறு தோண்ட அனுமதி கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை சந்தித்து மனு கொடுத்துள்ளார். இதற்கு அந்த அரசு அதிகாரி ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி 2 லட்சம் ரூபாய் பணத்தை மாலையாகக் கட்டி தனது கழுத்தில் அணிந்து கொண்டு அரசு அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து கோஷமிட்டபடி தன்னிடம் இருந்த பணத்தை அந்த அலுவலக வளாகத்தின் முன்பு அவர் வீசி எறிந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com