

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக இருக்கும் மல்லிகார்ஜு கார்கே மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். இவர் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார். இவரது மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் வரும் 25-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், கர்நாடகா மாநலத்தில் இருந்து மாநிலங்களை எம்.பி.க்கு போட்டியிடும் அவர், அதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அவர் வேட்புமனு தாக்கல் செய்யப்படும்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, டி.கே. சிவக்குமர், முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, கே.சி. வேணுகோபால் மற்றும் பல மாநில அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து பவன் கெர்ரா மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோரையும் வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. பவன் கெர்ரா காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவுக்குத் தலைமை தாங்கி வருகிறார். மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியின் செயலாளராக உள்ளார். இவர் 2024 மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தார். தற்போது மாநிலங்களவை எம்.பி. வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.