மனைவிக்கு வாட்ஸ் அப்பில் முத்தலாக்- வாலிபர் கைது

கடந்த 2017-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஜாஸ்மின் போலீசில் புகார் அளித்தார்.
மனைவிக்கு வாட்ஸ் அப்பில் முத்தலாக்- வாலிபர் கைது
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் கே.ஆர்.கே. காலனியை சேர்ந்தவர் அப்துல் அதீக் (வயது 32). இவருடைய மனைவி ஜாஸ்மின் கடந்த 2017-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர்.

கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அதீக் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து ஜாஸ்மின் கணவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அதீக் வாட்ஸ் அப்பில் முத்தலாக் ஆடியோ பதிவு செய்து ஜாஸ்மினுக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து ஜாஸ்மின் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் அதீக்கை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com