ஆண் நண்பனை மரத்தில் கட்டிவைத்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்.. நள்ளிரவில் நடந்த கொடூரம்

ஆண் நண்பனை சட்டைத் துணியாலும் பெல்டாலும் மரத்தில் கட்டி வைத்துள்ளனர்இருவரின் பென்சிலால் வரைந்த புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
ஆண் நண்பனை மரத்தில் கட்டிவைத்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்.. நள்ளிரவில் நடந்த கொடூரம்
Published on

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் 21 வயது இளம்பெண் 3 நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈவென்ட் மேனேஜ்மேண்ட் படித்துவந்த 21 வயது பெண்ணையும் அவரது ஆண் நண்பனையும் அன்றைய தினம் போப்தேவ் காட் பகுதியில் வைத்து 3 பேர் கொண்ட கும்பல் சூழ்ந்தது.

ஆண் நண்பனை சட்டைத் துணியாலும் பெல்டாலும் மரத்தில் கட்டி வைத்துவிட்டு மூவரும் சேர்ந்து பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இரவு 11 மணிக்கு இந்த சம்பவம் நடந்த நிலையில் அடுத்தநாள் [நேற்று] காலை 5 மணியளவில் அப்பெண் போலீசிடம் நடந்ததை கூறியுள்ளார்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றாவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மூவரில் இருவரின் பென்சிலால் வரைந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள போலீசார் அவர்களை பார்த்தால் தகவல் தெரிவிக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com