வாலிபர் கொலை வழக்கில் பா.ஜ.க.வினர் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

வழக்கு விசாரணை திருச்சூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.அரசு தரப்பில் 28 முக்கிய ஆவணங்கள் உள்பட 109 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 5 பேரை படத்தில் காணலாம்.
இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 5 பேரை படத்தில் காணலாம்.
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பெரிங்கோட்டுக்கரை பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷ்(வயது25). இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பின் நிர்வாகி யான இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் குட்டிக்காடு பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

காரில் பயங்கர ஆயதங்களுடன் வந்த கும்பல் ஆதர்சை படுகொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிஜில்(வயது27), பிரஜில்(28), மனு(27), ஷனில்(27), ஷிஹாப்(30), பிரஷ்னோவ்(32) ஆகிய 6பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருச்சூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் மொத்தம் 46 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அரசு தரப்பில் 28 முக்கிய ஆவ ணங்கள் உள்பட 109 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நிஜில், பிரஜில், மனு, ஷனில், ஷிஹாப், பிரஷ்னோவ் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். அவர்கள் 6 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா 4 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி சாலிஹ் தீர்ப்பு கூறினார்.

அபராத தொகையை கட்டத்தவறும் பட்சத்தில் கூடுதலாக 4 ஆண்டுகள் சிறைதண்டனை அனுப விக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரையும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

X

Maalai Malar
www.maalaimalar.com