ஆந்திராவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 4 பேர் பலி

படகில் இருந்த 10 பேரும் ஆற்றில் மூழ்கி உயிருக்கு போராடினர். இதனைக் கண்ட கிராம மக்கள் ஆற்றில் குதித்து 6 பேரை உயிருடன் மீட்டனர்.
கோப்புப்படம்
Published on

ஆந்திர மாநிலம் பாபட்டலா மாவட்டம் அச்சம்பேட்டையை சேர்ந்தவர் சைதன்யா (வயது 28). இவர் தனது உறவினர்கள் 10 பேருடன் கோனூரில் நடைபெறும் திருவிழாவிற்காக கிருஷ்ணா ஆற்றில் படகில் சென்றார்.

திருவிழா முடிந்து மீண்டும் படகில் புறப்பட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. படகில் இருந்த 10 பேரும் ஆற்றில் மூழ்கி உயிருக்கு போராடினர். இதனைக் கண்ட கிராம மக்கள் ஆற்றில் குதித்து 6 பேரை உயிருடன் மீட்டனர். மற்ற 4 பேர் தண்ணீரில் மூழ்கினர்.

இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்றில் இருந்து சைதன்யா, ஷைனி(10), சந்தியா (9), கார்த்திக் (12) ஆகியோரை பிணமாக மீட்டனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சோகம் நிலவியது.

X

Maalai Malar
www.maalaimalar.com