அயோத்தியில் 30-ந்தேதி பிரதமர் மோடி 15 கி.மீ தூரம் ரோடுஷோ

மறுசீரமைக்கப்பட்ட புதிய ரெயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ரோடுஷோ நிகழ்ச்சியையொட்டி பிரதமர் மோடியை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வர உள்ளனர்.
அயோத்தியில் 30-ந்தேதி பிரதமர் மோடி 15 கி.மீ தூரம் ரோடுஷோ
Published on

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி அதற்கு முன்பு வருகிற 30-ந் தேதி, அயோத்தி விமான நிலையம் திறக்கப்படுகிறது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. மறுசீரமைக்கப்பட்ட புதிய ரெயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

இதற்காக பிரதமர் மோடி 15 கி.மீ. தூரம் ரோடுஷோ நடத்தி ரெயில் நிலையத்துக்கு செல்கிறார். என்.எச்.27, தரம் பாதை, லதா மங்கேஷ்கர் சவுக், ராம் பாதை, டெதி பஜார், மொகாப்ரா சந்திப்பு வழியாக அவர் ரோடுஷோ நடத்துகிறார். ரோடுஷோ நிகழ்ச்சியையொட்டி பிரதமர் மோடியை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வர உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com