இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்கும்- காங்கிரஸ்

தேசிய அளவில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.
இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்கும்- காங்கிரஸ்
Published on

டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்கும் என்று காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சில கட்சிகள் சொந்த காரணங்களுக்காக இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளதாக ஜெய்ராம் ராமேஷ் கூறியுள்ளார்.

மேலும் அவர்,"வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டுடன் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.

தேசிய அளவில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது" என்றார்.

முன்னதாக, டெல்லியில் நாளை இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க வரும்படி திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் அரசியல் சூழல் மாறியுள்ள நிலையில், காங்கிரஸ் பங்கேற்கும் எந்த கூட்டத்திலும் திமுக பங்கேற்காது என திமுக திட்டவட்டமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com