ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு- 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

தேடுதல் வேட்டை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் கண்டறியப்பட்டு வருகிறதாக தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு- 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், ஒரு அதிகாரி உள்பட ஐந்து பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர்.

குல்காம் மாவட்டத்தின் தேவ்சர் பகுதியில் உள்ள அதிகாம் கிராமத்தில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது, துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது,

இதில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (போக்குவரத்து) மும்தாஜ் அலி உள்பட 4 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர்.

இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் மற்றும் குழுவின் தொடர்பு கண்டறியப்பட்டு வருகிறதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com