கேரளா பந்தளத்தில் மின்வேலியில் சிக்கி 2 பேர் பலி

வயலில் காட்டுப்பன்றிகள் புகுந்துவிடாமல் இருப்பதற்காக மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. மின்வேலியை கவனிக்காமல் சென்ற சந்திரசேகரன் அதில் சிக்கினார்.
கேரளா பந்தளத்தில் மின்வேலியில் சிக்கி 2 பேர் பலி
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் பந்தளம் கூரம்பாலை பகுதியை சேர்ந்தவர்கள் சந்திரசேகரன், கோபாலன். இவர்கள் இருவரும் இன்று காலை தோட்டுக்கரை பாலம் பகுதியில் வயல்வெளி வழியாக சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு வயலில் காட்டுப்பன்றிகள் புகுந்துவிடாமல் இருப்பதற்காக மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது.

அதனை கவனிக்காமல் சென்ற சந்திரசேகரன் மின்வேலியில் சிக்கினார். மின்சாரம் தாக்கி துடிதுடித்த அவரை, கோபாலன் காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. மின்வேலியில் சிக்கி இருவரும் பரிதாபமாக இறந்துவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com