கேரளாவில் வீடு தீப்பிடித்ததில் 2 குழந்தைகள்-கணவன், மனைவி பலி

தீ விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் வீடு தீப்பிடித்ததில் 2 குழந்தைகள்-கணவன், மனைவி பலி
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே உள்ள அங்காடிக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் பினிஷ்குரியன் (வயது 45). இயற்கை மசாலா பொருட்கள் வியாபாரி.

இவர் வீட்டின் 2-வது மாடியில் மனைவி அனுமோல் (40), மகள் ஜோனா (8), மகன் ஜெஸ்வின் (5) ஆகியோருடன் வசித்து வந்தார். வீட்டின் அருகிலேயே அவரது வர்த்தக நிறுவனம், குடோன், மசாலா பொருட்களை உலர்த்தும் பகுதி செயல்பட்டு வந்தது.

நேற்று இரவு பினிஷ்குரியன் குடும்பத்தினருடன் ஒரு அறையில் படுத்து தூங்கினார். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு அவரது இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கமாலி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் இறங்கினர். ஆனால் அதற்குள் பினிஷ்குரியன், அவரது மனைவி அனுமோல் மற்றும் 2 குழந்தைகள் தீயில் உடல் கருகி பலியானார்கள். தீ விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com