தேசிய ஸ்குவாஷ் போட்டி: ஜோஸ்னா, சவுரவ் கோஷல் ‘சாம்பியன்’

நொய்டாவில் நடைபெற்று வரும் 74-வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோஸ்னா, சவுரவ் கோஷல் ‘சாம்பியன்’ பட்டம் வென்றனர்.
தேசிய ஸ்குவாஷ் போட்டி: ஜோஸ்னா, சவுரவ் கோஷல் ‘சாம்பியன்’
Published on

புதுடெல்லி:

74-வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி நொய்டாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சவுரவ் கோஷல் (தமிழ்நாடு) 11-6, 11-13, 11-9, 11-6 என்ற செட் கணக்கில் மகேஷ் மங்காவ்ன்கரை (மராட்டியம்) தோற்கடித்து 12-வது முறையாக பட்டத்தை கைப்பற்றினார்.

பெண்கள் ஒற்றையரில் தமிழகத்தின் ஜோஸ்னா சின்னப்பா 11-6, 8-11, 11-2, 11-4 என்ற செட் கணக்கில் சக மாநில வீராங்கனை லக்‌ஷயா ரவீந்திரனை வீழ்த்தி 15-வது முறையாக பட்டத்தை சொந்தமாக்கினார். பட்டம் வென்ற இருவருக்கும் தலா ரூ.1½ லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com