சீன அதிபருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

பிரிக்ஸ் மாநாட்டின் போது, சீன அதிபர் ஷின்பிங்குடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசி உள்ளார்.
சீன அதிபருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு
Published on

பீஜிங்:

பிரிக்ஸ் அமைப்பில் உள்ள பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் 2 நாள் கூட்டம் பீஜிங் நகரில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனா சென்றிருந்தார்.

2-வது நாளான நேற்று சீன அதிபர் ஷின்பிங்கை, பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்தித்து பேசினர். அப்போது, பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது, புவியியல் ரீதியாக வெகுதொலைவில் இருந்தாலும் 5 நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவதில் ஆர்வம் காட்டுவது குறித்து ஷின்பிங் பாராட்டினார்.

அவர் கூறுகையில், “நீங்கள் ஒவ்வொரும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் பாதுகாப்பில் இணைந்து செயல்படுவதில் மிக நன்றாக செயல்பட்டு வருகின்றனர். உங்களின் இந்த முயற்சிகளை பாராட்டுகிறேன்” என்றார்.

நேற்றைய கூட்டத்தில் சீன அதிகாரிகள் யாரும், ஊடகங்களின் முன்பாக பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் கைகுலுக்கி கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com