

சென்னை:
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் அரைஸ் ஸ்டீல் நிறுவன ஆதரவுடன் 68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
ஆண்கள் ‘ஏ’ பிரிவில் இன்று காலை நடந்த ஆட்டம் ஒன்றில் கர்நாடகா- உத்தரகாண்ட் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் கர்நாடகா 85-83 என்ற புள்ளிக் கணக்கில் நடப்பு சாம்பியனை வீழ்த்தியது. அந்த அணி பெற்ற 2-வது வெற்றியாகும், கர்நாடகா நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானை தோற்கடித்து இருந்தது.
தமிழக அணி தொடக்க ஆட்டத்தில் 113-58 என்ற கணக்கில் அரியானாவை வீழ்த்தியது. இன்றைய 2-வது ஆட்டத்தில் குஜராத்தை சந்திக்கிறது.
தமிழக பெண்கள் அணி 68-48 என்ற கணக்கில் மத்திய பிரதேசத்தை தோற்கடித்து இருந்தது. இன்றைய ஆட்டத்தில் சத்தீஷ்கருடன் மோதுகிறது.