துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த படத்தை வெளியிட்ட கொள்ளையன் நாதுராம்

ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் வரும் குற்றவாளி நாதுராம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளான். #Nathuram #Periyapandianmurder
துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த படத்தை வெளியிட்ட கொள்ளையன் நாதுராம்
Published on

கடந்த மாதம் சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக குற்றவாளி நாதுராமை தேடி சென்னையை சேர்ந்த தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர். டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை நாதுராம் மற்றும் அவனின் கூட்டாளிகளை பிடிக்க முற்பட்ட போது ஆய்வாளர் பெரியபாண்டியனை நாதுராம் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என முதலில் கூறப்பட்டது.

ஆனால் பெரியபாண்டியனை சுட்டது சக போலீசான முனிசேகர் என்பது தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தப்பியோடிய குற்றவாளி நாதுராமை கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து நாதுராம் தலைமறைவாக இருப்பதாக ராஜஸ்தான் போலீசார் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com