நத்தம் அருகே போலி சித்த மருத்துவர் கைது

நத்தம் அருகே சித்த மருத்துவம் படிக்காமல் மக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

குள்ளனம்பட்டி:

நத்தம் அருகில் உள்ள வேலாம்பட்டி கிராமத்தில் பிரகாஷ் (வயது 37) என்பவர் சித்தமருத்துவமனை நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக இப் பகுதியில் கொரோனா தொற்றுக்காக இவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள் ளார்.

ஒரு சிலருக்கு நோயின் தாக்கம் குறையவே மேலும் மேலும் மக்கள் வர ஆரம்பித்தனர். இவர் சித்த மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக நத்தம் போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து மருத்துவத்துறையினர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமணி தலைமையில் நத்தம் போலீசார் அவரது கிளினிக்கு சென்று சோதனை நடத்தினர்.

மேலும் அவரது சான்றிதழை பார்த்தபோது இவர் முறையான மருத்துவம் படிக்காமலேயே சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதனையடுத்து பிரகாஷ் மீது வழக்குபதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com