நன்னிலம் அருகே சாராயம் கடத்திய 2 பேர் கைது

நன்னிலம் அருகே சாராயம் கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நன்னிலம்:

பேரளம் போலீசார் நல்லாத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த 2 மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் பேரளம் அருகே உள்ள தண்டதோப்பு பகுதியை சேர்ந்த வடிவேல் (வயது20) மற்றும் கோபிநாத்(20) என்றும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் வடிவேல் மற்றும் கோபிநாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com