பத்மஸ்ரீ விருது பெற்ற ‘யோகா பாட்டி’ கோவை நானம்மாள் காலமானார்

‘நாரிசக்தி’, ’யோகா ரத்னா’ மற்றும் 'பத்மஸ்ரீ’ உள்ளிட்ட விருதுகளை பெற்ற ‘யோகா பாட்டி’ கோவை நானம்மாள்(99) இன்று காலமானார்.
'பத்மஸ்ரீ’ நானம்மாள் பாட்டி
'பத்மஸ்ரீ’ நானம்மாள் பாட்டி
Published on

கோவை கணபதி பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த நானம்மாள். இவர் 8 வயது சிறுமியாக இருக்கும்போது தனது தந்தையிடமிருந்து யோகாசனம் கலையை கற்றுத் தேர்ந்தார்.

சுமார் 90 ஆண்டுகளாக யோகா பயிற்சியில் ஈடுபட்டதுடன் பலருக்கும் யோகாசனம் பயிற்சிகளை கற்றுக்கொடுத்து வந்தார். இதனிடையே இவரின் திறமையும் சேவையும் பாராட்டி மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இது கோவை மக்களிடையே மட்டுமின்றி தமிழக மக்களிடையிலும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சமீபநாட்களாக வயோதிகம் சார்ந்த உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த நானம்மாள் தனது 99-ம் வயதில் கோவையில் இன்று காலமானார்.

X

Maalai Malar
www.maalaimalar.com