நாமகிரிபேட்டை பெட்ரோல் பங்கில் தீ

நாமகிரிபேட்டை பெட்ரோல் பங்கில் தீ

நாமகிரிபேட்டை பெட்ரோல் பங்கில் திடீரென புகை கிளம்பி தீ பிடித்தது. உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.
Published on

ராசிபுரம்:

ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிபேட்டையில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்கில் உள்ள ஒரு அறையில் ஆயில், டிஸ்டில் வாட்டர் போன்றவை வைக்கப்பட்டிருந்தன. நேற்று இரவு அந்த அறையில் இருந்து திடீரென்று புகை கிளம்பியது.

இது பற்றி ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் விரைந்து சென்று தீயை அணைத்தனர். 

மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com