மோட்டார் சைக்கிள் மோதி மொபட்டில் சென்ற பெண் பலி

நாமகிரிப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மொபட்டில் சென்ற பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

நாமகிரிப்பேட்டை அருகே சீராப்பள்ளியை சேர்ந்தவர் உமாசங்கர் மனைவி சுதா (வயது 35). இவர் ராசிபுரம் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது காக்காவேரி கல்லூர் பகுதியில் சென்றபோது எதிரே யுவராஜ் (23) என்பவர் வந்த மோட்டார் சைக்கிளும், சுதாவின் மொபட்டும் மோதிக்கொண்டன.

இதில் படுகாயமடைந்த சுதா, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காயமடைந்த யுவராஜ் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com