நாமகிரிப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

நாமகிரிப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மூலபள்ளிபட்டி பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 72). விவசாயி. இவர் மெட்டாலா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வெள்ளையன் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளையன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com