திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 50 மெத்தைகள், தலையணைகள்- நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கினார்

நல்லதம்பி எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 50 மெத்தைகள், தலையணைகளை வழங்கியுள்ளார்.
மெத்தைகள், தலையணைகள் நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
மெத்தைகள், தலையணைகள் நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 லட்சத்து 65 ஆயிரம் நிதி ஒதுக்கியுள்ளார். அந்த நிதியின்கீழ் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டுக்கு 50 மெத்தைகள், தலையணைகள் மற்றும் கர்ப்பிணிகள் வயிற்றில் வளரும் குழந்தைகளை கண்காணிக்கும் கருவி, குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையம் கரியம்பட்டி அக்ரகாரம் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சுடு தண்ணீருக்காக வாட்டர் ஹீட்டர்கள் வாங்கப்பட்டன. இதனை வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் அரசு மருத்துமனையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் டாக்டர் திலிபன் தலைமை தாங்கினார். டாக்டர் கே.டி.சிவக்குமார் வரவேற்றார். டாக்டர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். தலையணை, மெத்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளை கண்காணிக்கும் கருவி ஆகியவற்றை கலெக்டரிடம் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. ஒப்படைத்தார். அவற்றை கலெக்டர் சிவன்அருள் பெற்றுக்கொண்டு அரசு மருத்துவ மனைக்கு வழங்கினார். இதில் முன்னாள் நகராட்சித் தலைவர் அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com