நல்லம்பள்ளி அருகே விவசாயியை தாக்கியவர் கைது

நல்லம்பள்ளி அருகே விவசாயியை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அடுத்த கொமத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திரவுபதி (வயது 50). அதே ஊரைச் சேர்ந்த முத்து என்கிற சின்னசாமி (45). விவசாயிகளான இவர்களுக்கு நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது முத்து, அவருடைய மனைவி மீனா (40) ஆகியோர் திரவுபதியிடம் தகராறு செய்து தாக்கினர். இதில் அவருக்கு காது கிழிந்து காயம் அடைந்தார். இதனை தடுக்க சென்ற அவருடைய மகள் செண்பகத்தை தாக்கி அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துவை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com