நாகர்கோவில் அருகே ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நாகர்கோவில்:

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் சேவியர் பிரைட் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சசிகுமார் சிறப்புரையாற்றினார். 

ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் பெற்று வந்த உயர்நிலை கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்ததை திரும்ப பெற வேண்டும். ஜாக்டோ- ஜியோ பேராட்டத்தின்போது ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை நீக்க வேண்டும். ஆசிரியர் பணிநியமனத்திற்கான வயது வரம்பை குறைக்கக்கூடாது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்த பட்டன. 

இதில் அக்சீலியா மெர்லின், சுமஹாசன், நாகராஜன், ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com