நாகமலைபுதுக்கோட்டை அருகே சூதாடிய 5 பேர் கைது

நாகமலைபுதுக்கோட்டை அருகே சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

நாகமலைபுதுக்கோட்டை:

நாகமலைபுதுக்கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சம்பக்குளம் பகுதியில் சிலர் கும்பலாக அமர்ந்து சூதாடிக் கொண்டிருந்தனர். போலீசார் வருவதை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்த அவர்களை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கிழவனேரியைச் சேர்ந்த ராஜகுரு(வயது 30), கருப்பையா(49), செல்லூர் அகிம்சாபுரத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி(56), புளியங்குளத்தை சேர்ந்த கண்ணன்(31) தனக்கன்குளத்தை சேர்ந்த தனபாலன்(43) என்பதும், இவர்கள் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. இவர்களை கைது செய்த போலீசார், ரூ.15 ஆயிரத்து 240 மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com