

நாகலாந்து மாநிலத்தை ஆட்சி செய்த நாகா மக்கள் முன்னணி தலைமையிலான கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த பா.ஜ.க. அந்த கூட்டணியை முறித்து கொண்டது. புதிதாக தொடங்கப்பட்ட தேசியவாத குடியரசு முன்னேற்ற கட்சியுடன் கூட்டணி அமைத்து சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலை பா.ஜ.க. சந்தித்தது.
இத்தேர்தலில் பாதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நேற்று மாலை ஆறு மணியளவில் வெளியான தேர்தல் முடிவுகளின்படி நாகா மக்கள் முன்னணி 17 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. பா.ஜ.க. 9 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத குடியரசு முன்னேற்ற கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில், இறுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி அதன்படி பா.ஜ.க., தேசியவாத குடியரசு முன்னேற்ற கட்சி கூட்டணி கட்சி 29 இடங்களையும், நாகா மக்கள் முன்னணி 29 இடங்களையும் பிடித்துள்ளது. ஜனதா தளம் கட்சி 1 இடத்தையும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்தையும் பிடித்துள்ளார்.
நாகலாந்தில் ஆட்சியமைக்க 31 இடங்கள் தேவைப்படும் நிலையில் பா.ஜ., கூட்டணி மற்றும் என்.பி.எப்., கட்சிக்கு 2 சீட்டுகள் தேவைப்பட்டன. இந்நிலையில் சுயேட்சை வேட்பாளராக நின்று வெற்றி பெற்றுள்ள ஒஷு பா.ஜ.க.விற்கு அதரவளித்துள்ளார். மேலும் ஜனதா தள கட்சியும் தனது ஆதரவை பா.ஜ.க.விற்கு அளித்துள்ளது.