

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற நான்காவது சுற்று போட்டியில் முன்னணி வீரரான ரபேல் நடாலும், உக்ரேனின் அலெக்ஸாண்டர் டோல்கோபோலோவும் மோதினர். இப்போட்டியில் நடால் 6-2, 6-4, 6-1 என்ற வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிப்பெற்றார்.
இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆஸ்திரியாவின் டோம்னிக் தெயிம், அர்ஜெண்டினாவின் ஜீயான் மார்டின் டெல் பொர்டோவை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் சுற்றை தெயின் 6-1 என எளிதாக கைப்பற்றினார். அடுத்த சுற்றயும் தெயின் 6-2 என கைப்பற்றினார். அதன்பின்னர், சுதாரித்துக் கொண்ட அர்ஜெண்டினா வீரர் அடுத்த இரண்டு சுற்றுகளையும் 6-1, 7-6 என கைப்பற்றவே ஆட்டத்தின் விறுவிறுப்பு அதிகரித்தது.
வெற்றியைத் தீர்மானிக்கும் ஐந்தாம் சுற்றில் பொர்டோ 6-4 என கைப்பற்றினார். இதையடுத்து டோம்னிக் தெயிம் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த நான்காம் சுற்றுப் போட்டியில் முதல்நிலை வீராங்கனணயான பிலிஸ்கோவா, அமெரிக்காவின் பிராடியை எதிர்கொண்டார். இப்போட்டியில், பிலிஸ்கோவா 6-1, 6-0 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிப் பெற்றார்.