பார்சிலோனா ஓபன் டென்னிஸ் - காலிறுதிக்கு முன்னேறினார் ரஃபேல் நடால்

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் நாட்டு வீரர் ரஃபேல் நடால் காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.
பார்சிலோனா ஓபன் டென்னிஸ் - காலிறுதிக்கு முன்னேறினார் ரஃபேல் நடால்
Published on

ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் முன்னணி வீரரான ரஃபேல் நடால் கில்லர்மோ கார்சியா லோபசை எதிர்கொண்டார். இந்த போட்டியில் நடால் 6-1, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறவுள்ள காலிறுதி போட்டியில் ரஃபேல் நடால் சுலோவேகியா நாட்டின் கிளிசானுடன் மோதவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு போட்டியில் பல்கேரியாவை சேர்ந்த கிரிகர் டிமிட்ரோவ், துனிசியாவை சேர்ந்த மாலெக் ஜசிரியை எதிர்கொண்டார். இந்த போட்டியில் டிமிட்ரோவ் 7-5 3-6 7-6(8) என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்று காலிறுதிக்கு நுழைந்தார். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com