விம்பிள்டன் டென்னிஸ்: முர்ரே, நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்று போட்டியில் முன்னணி வீரர்களான முர்ரே, நடால் வெற்றி பெற்றுள்ளனர்.
விம்பிள்டன் டென்னிஸ்: முர்ரே, நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

லண்டன்:

பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இரண்டாவது சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றன. இப்போட்டியில், ஸ்பெயினின் ரபேல் நடாலும் அமெரிக்காவின் டொனால்ட் யங்கும் மோதினர். இப்போட்டியில் தனது திறமையான ஆட்டத்தை வெளிகாட்டிய நடால் 6-4, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் யங்கை வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே ஜெர்மனியின் டஸ்டின் பிரவுனை எதிர்கொண்டார். இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான முர்ரே 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் பிரவுனை எளிதாக வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இவர்களை தவிர முன்னணி வீரர்களான குரோஷியாவின் மரின் சிலிச் ஜப்பானின் கே நிஷிகோரி, பிரான்சின் சோங்கா ஆகியோரும் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரங்கணைகளான ரோமானியாவின் சிமோனா ஹலிப், உக்ரேனின் எலினா ஸ்விடோலினா, இங்கிலாந்தின் ஜோனா கோண்டா, அமெரிக்காவின் வீணஸ் வில்லியனம்ஸ், ஸ்லொவேகியாவின் டோம்னிகா சிபுல்கோவா ஆகியோர் இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்று மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவிஜ் சரண்- பூரம் ராஜா ஜோடி, பிரேசிலின் ஜோவா சௌஷா-இங்கிலாந்தின் கைல் எட்மண்ட் ஜோடியை 7-6, 3-6, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 

பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஷா- பெல்ஜியத்தின் பிலிப்கின்ஸ் ஜோடி, சீனாவின் ஷாங்- ஜப்பானின் ஒசாகா ஜோடியை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com