நச்சலூர் அருகே தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை

நச்சலூர் அருகே தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

நச்சலூர்:

நச்சலூர் அருகே உள்ள தளிஞ்சி, ரெங்காச்சிப்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது.30). கொத்தனார். இவரது மனைவி மணிமேகலை(21). பாலகிருஷ்ணனுக்கு மதுபழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த பாலகிருஷ்ணன், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விட்டத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com