

கொடைரோடு:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியினர் தமிழகம் முழுவதும் சுங்கச்சாடியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி கொடைரோடு சுங்கச்சாவடி மையத்தை திண்டுக்கல் தொகுதி செயலாளர் ஜெயசுந்தர் தலைமையில் நிர்வாகிகள் செந்தில்முருகன், பரணி, ராஜா, முருகன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆவேசம் அடைந்த போராட்டக்காரர்கள் போலீசாரை மீறி சுங்கச்சாவடி மையத்திற்குள் புகுந்து அங்கிருந்த கண்ணாடி மற்றும் தடுப்புகளை உடைத்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுங்கச்சாவடிகளை எடுத்து விட்டு வானங்களை கட்டணமில்லாமல் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
மேலும் தமிழக அரசை புறக்கணிக்கும் மத்திய அரசுக்கு நாங்கள் ஏன் வரி செலுத்த வேண்டும் என்று ஆவேசமாக தெரிவித்தனர். போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். போராட்டத்தில் ஈடுபட்ட 44 பேர் கைது செய்யப்பட்டனர். #Cauveryissue