காளையார்கோவிலில் மர்ம காய்ச்சலுக்கு மாணவன் பலி

காளையார்கோவிலில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
காளையார்கோவிலில் மர்ம காய்ச்சலுக்கு மாணவன் பலி
Published on

சிவகங்கை:

காளையார்கோவில் அருகே உள்ள மறவமங்களம் வேத தெருவைச் சேர்ந்தவர் சங்குமுத்து. இவரது மகன் சரவணன் (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

சில நாட்களாக சரவணனுக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. மருத்துவரிடம் காண்பித்தும் குணமாகவில்லை.

இதையடுத்து சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சரவணன் சிகிச்சை பெற்றார். அங்கு நிலைமை மோசமானதால் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாணவன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார்.

காளையார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மறவமங்கலம் கிராமத்தில் கழிவுநீரும், குப்பையும் தேங்கியுள்ளதால் நோய்கள் பரவி வருகின்றன.

அதனை தடுக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com