திசையன்விளையில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி

திசையன்விளையில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தான்.
திசையன்விளையில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி
Published on

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள குமாரபுரத்தை சேர்ந்தவர் முத்துப்பட்டன். ஆட்டோ டிரைவர். இவரது மகன் இந்திரன் செல்வகுமார் (வயது 13). இவன் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். 

இந்நிலையில் மாணவனுக்கு கடந்த 3-நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து திசையன்விளை அரசு மருத்துவமனையில் அவனை சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவனுக்கு காய்ச்சல் குணமாகததால் மாணவன் இந்திரன் செல்வகுமாரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் அவனுக்கு மர்ம காய்ச்சல் இருப்பதாக கூறி  சிகிச்சை அளித்து வந்தனர். 

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இந்திரன் செல்வகுமார் நேற்று மாலை பரிதாபமாக இறந்தான். மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியான சம்பவம் திசையன்விளை பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com